சனி, 30 ஜூன், 2018

மாவீரன் குருசாமி யாதவ்




மாவீரன் குருசாமி யாதவ்.



பொதிகை நதி பாயும் தென் தமிழகத்தில் திருநெல்வேலி சீமையில் சுமார் 500 யாதவர் குடும்பங்களை கொண்ட ஊர் தான் ஆட்கொண்டார்குளம். இந்த ஊர் சங்கரன்கோவில் வட்டாரத்தில் உள்ள யாதவர் கிரமங்களுக்கு தலைமை கிரமமாக ஆண்டாண்டு காலமாக திகழ்ந்து வருகிறது. இந்த ஊரில் உள்ள யாதவர்களுக்கு ஆடு,மாடு மேய்ச்சலும் விவசாயமும் குல தொழிலாகும். இவர்கள் தங்கள் ஆடுகளை மேய்ச்சலுக்காக வெளியூர் சென்று வரும் போது ஏற்படும் இடையூறுகளை தடுப்பதற்காக இவர்கள் சிலம்பாட்டம் முறையாக கற்றுக் கொண்டு வந்தார்கள்.இவர்களுக்கு கொண்டவல்வாடியை சேர்ந்த ராக்கப்ப கோனார் அவர்கள் மூலம் முறையாக சிலம்பம் கற்று மிகச் சிறந்து சங்கரன்கோவில் வாட்டாரத்திலே சுமார் 100 மையில் சுற்றளவில் இவர்களை வெல்ல யாரும் இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு பேரும் புகழும் பெற்று விளங்கினார்கள்.இந்த வீரம் விளைந்த பூமியில் பிறந்தவர் தான் நம் குல தெய்வம் C.G.யாதவ் என்று செல்லமாக அழைக்கபடும் நம் மாவீரன் குருசாமி யாதவ் அவர்கள்

குருசாமி யாதவின் இளமைபருவம்.
இவர் ஆட்கொண்டான்குளம் ஊரில் செல்லயா யாதவ் அவர்களுக்கும் வள்ளியம்மாள் என்பவருக்கும் 04-03-1965 அன்று செல்ல மகனாக பிறந்தார். இவர் சிறு வயதிலிருந்து தன்னோட தொடக்கபள்ளியே ஆட்கொண்டார்குளத்திலும். உயர்நிலையே சங்கரன்கோவிலும் முறையாக கற்றார்.C.G.யாதவ் அவர்கள் பள்ளி படிப்பில் சிறந்த மாணவராக விளங்கினார்.இவர் கபடி விளையாட்டில் சிறந்து விளங்கி பல பரிசுகளையும் பெற்றுள்ளார். பட்டப்படிப்பை மதுரை யாதவர் கல்லூரியில் படித்து B.sc பட்டம் பெற்றார்.அங்கு உள்ள யாதவர் இளைஞர்களை ஒன்று திரட்டி யாதவ மாணவ பேரவை அமைத்து திறம்பட செயல்படுத்தி வந்தார்.

இளங்கலை பட்டப்படிப்பை முடித்தவர்.
யாதவர் கல்லூரியில் படிக்கும்போதே
இனப்பற்றும் எழுச்சியும் கொண்டு
மாணவர்களுக்குத் தளபதியாக
மதிக்கப்பட்டவர் . அவரது சிற்றூராம்
ஆட்க்கொண்டார்கு ளத்தில் யாதவர்கள்
மட்டுமே வாழ்கின்ற பகுதியாகும்.
அடுத்துள்ள வீராணம் சிற்றூரில்
தங்களை ஆதிக்கவாதிகளாக
எண்ணிக்கொண்ட ஒரு வர்க்கத்தினர்,
யாதவர்களை நீண்ட காலமாகத் தொழில்
துறையில் ஈடுபடவிடாமல், அடகுத்
தொழில், அரசு தொடர்பான
ஒப்பந்தங்களில் அவர்களே இருந்து ஆட்சி
செய்தமை கண்டு-குருசாமி யாதவ்
அவர்கள் சினங்கொண்டு பொங்கி
எழுந்தார். அண்ணன் குருசாமி யாதவ்
அவர்களை போலவே தொழில்
செய்யவும், அரசு ஒப்பந்தங்களை
பெறவும் தொடங்கினார். அண்ணன்
குருசாமி யாதவ் தொட்டது எல்லாம்
பொன்னாக மாறிய காலம் அது.

1996 ஆம் ஆண்டு அண்ணன் குருசாமி யாதவ் சங்கரன்கோவில் ஒன்றிய செயலாளராக தேர்தலில் நின்று வெற்றியும்
பெற்றார். எங்கு சென்றாலும் எதிலும்
அண்ணன் குருசாமிக்கு தான் முதல்
மரியாதை. கொடிகட்டிப் பறக்கின்ற
நம்மிடம் போட்டி போடத் தொடங்கி
விட்டானே என்று ஒரு சாரார்க்கு
மிகுந்த பொறாமை அடர்ந்தது. தீர்த்துக்
கட்டத் திட்டம் தீட்டினர்! காவல் துறை
எச்சரித்தும் அந்த அரிமா அஞ்சாமல் வலம்
வந்தது. முப்பது பேர் கொண்ட
கூலிப்படைக்குப் பல லட்சம்
கொடுத்துப் பல மாதங்களுக்குப்
பின்னர் அவர்களால் 20-07-2000 அன்று
படுகொலை செய்யப்பட்டார்.
அவ்வீரனுடைய உயிர்தோழன்
திரு.மாரியப்பன் அவர்களும்,
அவர்களோடு இணைந்து
போராடியவரும் இன்னுயிர் நீத்த அவலம்
நமது இதயத்தைக் கசக்கிப்
பிழிகின்றது.

இன்னவருடைய
ஆள்வினைத் திறம் நம்மை வியந்து
நெகிழச் செய்கின்றது. மக்கள் தமிழ்
தேசக் கட்சி உருவாவதற்கு அடித்தளம்
அமைத்தவர். மதுரையம்பதியில்
மாவீரன் அழகுமுத்து விழாவினை
அரசு எடுத்துச் சிறப்பித்த போது 70
ஊர்திகளில் ஏழாயிரம் பேரைத் திரட்டி
வந்தவர்.

என்றென்றும் குருசாமி யாதவ் புகழ்   நிலைத்து நின்று
நமக்குச் சமுதாயத் தொண்டின்
இன்றியமையாமையினை  உணர்த்தி கொன்டே இருக்கும்.

சங்கரன் கோவில் ஒன்றியப் பெருந்தலைவராகத் திகழ்ந்தவர். அப்பகுதிப் பால்பண்ணைத்தலைவர். மற்றும் பல பொறுப்புகள் வகித்தவர். உதவி என்று வந்தவர்களுக்கு முகம் சுழிக்காமல் உதவி செய்தவர். சிறு வயதுலேயே சமுதாய உணர்வு கொண்டவர்.யாதவர் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தவர். யாதவர் கல்லூரியில் படிக்கும்போதே இனப்பற்றும் எழுச்சியும் கொண்டு மாணவர்களுக்குத் தளபதியாக மதிக்கப்பட்டவர். அவரது சிற்றூராம் ஆட்க்கொண்டார்குளத்தில் யாதவர்கள் மட்டுமே வாழ்கின்ற பகுதியாகும். அடுத்துள்ள வீராணம் சிற்றூரில் தங்களை ஆதிக்கவாதிகளாக எண்ணிக்கொண்ட ஒரு வர்க்கத்தினர், யாதவர்களை நீண்ட காலமாகத் தொழில் துறையில் ஈடுபடவிடாமல், அடகுத் தொழில், அரசு தொடர்பான ஒப்பந்தங்களில் அவர்களே இருந்து ஆட்சி செய்தமை கண்டு-குருசாமி யாதவ் அவர்கள் சினங்கொண்டு பொங்கி எழுந்தார். அண்ணன் குருசாமி யாதவ் அவர்களை போலவே தொழில் செய்யவும், அரசு ஒப்பந்தங்களை பெறவும் தொடங்கினார். அண்ணன் குருசாமி யாதவ் தொட்டது எல்லாம் பொன்னாக மாறிய காலம் அது. 1996 ஆம் ஆண்டு அண்ணன் குருசாமி யாதவ் சங்கரன்கோவில் ஒன்றிய செயலாளராக தேர்தலில் நின்று வெற்றியும் பெற்றார். எங்கு சென்றாலும் எதிலும் அண்ணன் குருசாமிக்கு தான் முதல் மரியாதை. கொடிகட்டிப் பறக்கின்ற நம்மிடம் போட்டி போடத் தொடங்கி விட்டானே என்று ஒரு சாரார்க்கு மிகுந்த பொறாமை அடர்ந்தது. தீர்த்துக் கட்டத் திட்டம் தீட்டினர்! காவல் துறை எச்சரித்தும் அந்த அரிமா அஞ்சாமல் வலம் வந்தது. முப்பது பேர் கொண்ட கூலிப்படைக்குப் பல லட்சம் கொடுத்துப் பல மாதங்களுக்குப் பின்னர் அவர்களால் 20-07-2000 அன்று படுகொலை செய்யப்பட்டார். அவ்வீரனுடைய உயிர்தோழன் திரு.மாரியப்பன் அவர்களும், அவர்களோடு இணைந்து போராடியவரும் இன்னுயிர் நீத்த அவலம் நமது இதயத்தைக் கசக்கிப் பிழிகின்றது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு தளபதி தீனதயாளன்’, நெல்லை மாவட்டத்தில் ஒரு குருசாமி. இன்னவருடைய ஆள்வினைத் திறம் நம்மை வியந்து நெகிழச் செய்கின்றது. மக்கள் தமிழ் தேசக் கட்சி உருவாவதற்கு அடித்தளம் அமைத்தவர். மதுரையம்பதியில் மாவீரன் அழகுமுத்து விழாவினை அரசு எடுத்துச் சிறப்பித்த போது 70 ஊர்திகளில் ஏழாயிரம் பேரைத் திரட்டி வந்தமை கண்டு வியந்து மாண்புமிகு பி.டி.ஆர் பழனிவேல்ராஜன் அவர்கள் அன்னாரைப் பாராட்டி விருது வழங்கினார். புகழுடம்பு எய்திய சாதனைச் இருவரும் நமது நெஞ்சத்தில் என்றென்றும் நிலைத்து நின்று நமக்குச் சமுதாயத் தொண்டின் இன்றியமையாமையினை உணர்த்துவார்கள்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக