புதன், 27 ஜூன், 2018

இடைக்காட்டுச் சித்தர்


இடைக்காட்டுச் சித்தர் 




இடைக்காட்டுச் சித்தர்  18 ஒருவர். இவர் இடைக்காடு என்றவூரில் வாழ்ந்தவர். இடையர் குடியிலே பிறந்தவர். இதனால் இடைக்காடுச் சித்தர் எனப் பெயர் பெற்றார். இடைக்காடு - முல்லை நிலம். இங்கு ஆடு மாடு மேய்ப்பவர் - இடையர் - கோனார் எனப்படுவர். இக்கோனாரையும் ஆடுமாடுகளையும், முன்னிறுத்தி பாடியதால் இப்பெயர் பெற்றார் என்பர். பதினெண் சித்தர் வகைக்குள் இவரும் அடங்குவார்.
இவரது வரலாறு துணியப்படவில்லை. இவர் கொங்கணர் என்பாரின் சீடர் என்றும் சித்தர்கள் காலம் எனப்படும் கிபி 10-15 ஆம் நூற்றாண்டினர் என்றும் கூறுகின்றனர். சங்க காலத்தினர் என்ற கருத்தும் நிலவுகிறது. இவரது பாடல்கள் இடைக்காட்டுச் சித்தர் பாடல் என்ற நூலிலே இடம்பெறுகின்றன. இடைக்காடரின் ஞானசூத்திரம் 70 என்ற நூல் மிகவும் சிறப்புடையது. இவர் திருவண்ணாமலையில் சமாதியடைந்தார். ஜனன சாகரத்தில் சமாதியடைந்தார் என்று போகர் கூறுகிறார். 

இடையர் குலத்தில் பிறந்த இவர் ஆடு, மாடு மேய்த்தது வந்தார் அதே சமயம்   வானவெளியில் சுற்றும் கோள்களையும் சரியாக கணிக்கும் திறன் கொண்டு விளங்கினார் அடுத்த பதினான்கு ஆண்டுகள் கடும் பஞ்சம் வரபோவதை அறிந்த சித்தர் தன் ஆடுகளுக்கு எருக்கு இலைகளை உன்னகொடுது பழக்கினார் தனது குடிசை சுவர்களை நெல்லும் மண்ணும் கலந்தது பூசினர். அதேபோல் பஞ்சம் வந்தது எல்லோரும் துன்புற்ற போதும். 
இடைகாட்டாரும் அவர்தம் ஆடுகளும் துபுரவில்லை. மகா ஞானியான இடைகாட்டார்  எந்த வரட்சியையும் தாங்கும் எருக்கு இலைகளை தன் ஆடுகளுக்கு கொடுத்து பழக்கியிருந்தார்.  ஆடுகள் எருக்க இலைகளை தின்று அரிப்பெடுத்து சுவற்றில் உராய்ந்து கொள்ளும் அதை அறிந்த மகான் சுவற்றில் நெல்லை கலந்து பூசியிருந்தார் ஆடுகள் அவ்வாறே சுவற்றில் உரச நெல் மனிகள் அரிசியாக உதிர்ந்தன அவற்றை சேகரித்து கஞ்சி வைத்து குடித்து தன் தவவாழ்வையும் ஆடு மேய்பதையும் தொடர்ந்தார் இதை அறிந்த நவகிரகர்கள் ஆத்திரம் கொண்டு சித்தரிடம் வந்தார்கள் உலகம் முறைபடி இயங்குவதற்கு தடையாக உள்ளீர் இடையரே இது என்ன ஞாயம் என்று ஒருமித்த குரலாக கேட்க சித்தர் அவர்கள் அமைதியாக அன்பு தழும்ப நவகிரக நாயகர்களே என் குடில் தேடி வந்தது மிக்க மகிழ்வு சற்று அமருங்கள் இல்லம் தேடி வந்தோரை உபசரிப்பதே எங்கள் தமிழ் மரபு என்று கூறி தான் வைத்திருந்த அரிசி கஞ்சியை ஆளுக்கு கொஞ்சம் பருக கொடுத்தார். நவகிரக நாயகர்கள் அதை வாங்கி பருகியதுக் கலைத்து உறங்கிவிட்டார்கள். மீண்டும் அவர்கள் கண்திறந்து பார்த்தபோது எங்கும் மழை பெய்திருந்ததை உணர்ந்து எவ்வாறு இது சாத்தியம் என்று விழித்தார்கள். பிறகு அறிந்து கொண்டார்கள் சித்தர்தாம் தங்களை உறங்க செய்து இடம் மாற்றி விட்டார் அதனால்தான் மழைகாலம் ஆரம்பித்து விட்டது என்றுணர்ந்து இடைகாட்டு சித்தரே உங்ககளை நம்பிக்கையுடன் வணங்குவோரை நாங்கள் துன்புருத்த மாட்டோம் என்று ஆசிவதித்து சென்றார்கள். 
நாமும் சித்தரை வணங்கி சகல ஐஸ்வர்யங்களும் பெற்று வாழ்வோம்.

      “ஓம் ஸ்ரீம் இடைக்காடர் சித்தர் சுவாமியே போற்றி!” 


தியான செயுள்

           ஆயனராய் அவதரித்து
ஆண்டியாய் உருத்தரித்து
அபலைகளுக்கருளிய கோணார் பெருமானே!
ஓடுகின்ற நவக்கிரகங்களை
கோடு போட்டு படுக்கவைத்த
பரந்தாமனின் அவதாரமே!
மண் சிறக்க விண்சிறக்க
கடைக்கண் திறந்து காப்பீர்
இடைக்காடர் சுவாமியே!




1. கிருஷ்ணனை தரிசிப்பவரே போற்றி!

2. கருணாமூர்த்தியே போற்றி!
 3. பஞ்சத்தைப் போக்குபவரே போற்றி!
 4. இளநீர் பிரியரே போற்றி!
5. உலகரட்சகரே போற்றி!
 6. அபயவரதம் உடையவரே போற்றி!
 7. மருந்தின் உருவமானவரே போற்றி!
 8. பூலோகச் சூரியனே போற்றி!
9. ஒளிமயமானவரே போற்றி!
 10. கருவை காப்பவரே போற்றி!
11. ஸ்ரீம்பீஜாட்சரத்தில் வசிப்பவரே போற்றி!
 12. கால்நடைகளைக் காப்பவரே போற்றி!
13. ஸ்ரீ லட்சுமியின் கருணையை அளிப்பவரே போற்றி!
 14. அங்குசத்தை உடையவரே போற்றி!
15. தேவலீலை பிரியரே போற்றி!
 16. எல்லாம் வல்ல வனத்தில் வசிக்கும் ஸ்ரீ இடைக்காட்டு சித்தர் சுவாமியே போற்றி! போற்றி!



இவ்வாறு அர்ச்சித்த பின்பு மூலமந்திரமான ஓம் ஸ்ரீம் இடைக்காடர் சித்தர் சுவாமியே போற்றி!என்று 108 முறை ஓதப்படும். அதன்பின் நிவேதனமாக இளநீர், பால், பழம், தண்ணீர் வைக்க வேண்டும். இவருக்கு பச்சை வண்ண வஸ்திரம் அணிவிக்க வேண்டும். பூசை செய்ய உகந்த நாள் புதன்கிழமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக