சனி, 30 ஜூன், 2018

விடுதலை வீரர் சிங்கமுத்துச்சேர்வை(1761-5.9.1799)





விடுதலை வீரர் சிங்கமுத்துச்சேர்வை(1761-5.9.1799)

ஓட்டப்பிடாரம் என்னும் அழகிய வீரபாண்டியபுரத்தை யாதவ குலத்தை சேர்ந்த மன்னர் அளகைக்கோன் ஆண்டு வந்தார்.

மன்னர் அளகைக்கோனுக்கு யாதவ குலத்தவரான முப்புலிவெட்டி சிங்கமுத்துச்சேர்வை தளபதியாக விளங்கினார்.
ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலை போரில் ஓட்டப்பிடாரம் மன்னர் அளகைக்கோன் தலைமையில் சிங்கமுத்துச்சேர்வை வீரபாண்டியகட்டபொம்மனுக்கு ஆதரவாக பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் போரிட்டு வந்தார்.
போர் இறுதி கட்டத்தை எட்டியவுடன் கட்டபொம்மன்,ஊமைத்துரை உட்பட முக்கியமானவர்கள
கோட்டையைவிட்டு ரகசியமாக வெளியேற உதவினார் சிங்கமுத்துச்சேர்வை.
தளபதி சிங்கமுத்துசேர்வை தலைமையிலான ஒரு படை பாஞ்சை கோட்டையின் உட்புறம் இருந்துகொண்டு ஆங்கிலேயர்களை உள்ளே வரவிடாமல் தீரத்துடன் போர் புரிந்தனர்.
தளபதி சிங்கமுத்துச்சேர்வை ஆங்கிலேயர்களால் சுடப்பட்டு பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்குள்ளேயே வீரமரணம் அடைந்தார். தன் இறுதி மூச்சு உள்ளவரை ஒரு ஆங்கிலேயனைக்கூட கோட்டைக்குள் வர விடாமல் வீரப்போர் புரிந்தார்.
கட்டபொம்மனின் படைவீரனுக்கு கூட அங்கீகாரம் கிடைத்துவிட்டது.ஆனால்
தளபதி சிங்கமுத்துச்சேர்வையை போல பல யாதவகுல மாவீரர்கள் வரலாற்றில் மறைக்கப்பட்டு உள்ளனர்.
தனது பல ஆண்டு கால ஆராய்ச்சியில் சிங்கமுத்துச்சேர்வையையும் வெளிக்கொண்டு வந்தவர்.

ஆயர் குல சேவகர் வரலாற்று ஆய்வாளர் திரு.சுபாஷ்சேர்வைக்கோனார்.

தளபதி சிங்கமுத்துச்சேர்வை வீரமரணம் அடைந்த நாளான 5.9.1799 அன்று ஒவ்வொரு வருடமும் குருபூஜையை யாதவர்களும், கட்டபொம்மன் விசுவாசிகளும் அனுசரிக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக