சனி, 30 ஜூன், 2018

ஆயர் குல பேரறிஞர் எல். எஸ். சட்டநாதக் கரையாளர்.


 ஆயர் குல பேரறிஞர் எல். எஸ். சட்டநாதக் கரையாளர்.


 [25-10-2016  அவர்கள் பிறந்த நாள்]

இடையர்களாய் பிறந்த அனைவரும் போற்றி வணங்கத்தக்க மாமேதையின் பிறந்தநாள் அமெரிக்க பேரரசே 1955-ல் அமெரிக்காவிற்கு வரழைத்து மூன்று மாத காலம் சிறப்பு விருந்தினராக தங்கவைத்து அமெரிக்காவின் 13 மாநில சட்டமன்றங்களிலும் இவரது சிறப்பு பேருரையை ஆற்ற வைத்துள்ளது. 13-க்கு மேற்பட்ட கல்லூரிகளில், குறிப்பாக பெண்கள் உள்பட பேருரை ஆற்ற இவரை சிறப்பு அழைப்பாளராக அழைத்து பேருரை ஆற்ற வைத்தார்கள்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தில் படித்த ஜவகர்லால் நேருவின் தங்கை விஜயலட்சுமி பண்டிட் அப்பொழுது இந்தியத் தூதராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.
பிரதமர் நேருவும் தங்கை விஜயலட்சுமி பண்டிட்டும் ஒன்றாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தில் பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவ்வளவு சிறப்புமிக்க கல்வியாளர் திருமதி விஜயலட்சுமி பண்டிட் பேரறிஞர் எல்.சட்டநாதக்கரையாளர் அவர்களின் அறிவாற்றலையும், திறமையையும் கண்டு வியந்து எல்.சட்டநாதக் கரையாளர் அவர்கள் மீது மையல் கொண்டு எல்.சட்டநாத கரையாளரோடு நெருக்கம் கொண்டு பழகியதாக அப்போது பெரியவர்கள் அரசல் புரசலாக பேசிக்கொள்வார்கள்.
1942-ல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்டு ஆறுமாத சிறைத்தண்டனை பெற்று வேலூர் சிறைக்கு தொடர் வண்டியில் முதல் வகுப்பில் பயணம் செல்ல மறுத்து மூன்றாம் வகுப்பில் பயணம் செய்தார்.
பின்னர் திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டு, மூதறிஞர் சக்ரவர்த்தி ராஜாஜி அவர்களுடன் திருச்சி சிறையில் இருந்தார்.
அப்பொழுதுதான் "திருச்சி ஜெயில்" என்கின்ற ஆங்கில நூலை எழுதி வெளியிட்டார்.
திருச்சி ஜெயிலில் இருந்தபோது மூதறிஞர்  ராஜாஜி, அவினாசிலிங்கம் செட்டியார், எம்.பக்தவத்சலம் போன்ற241 தலைவர்களுடன் சிறையில் இருந்தார்.
அப்பொழுது எல்.சட்டநாதக்கரையாளரின் அறிவாற்றலையும், ஆங்கிலப்புலமையையும் கண்டு அனைவரும் வியந்து பாராட்டியுள்ளனர்.
1937, 1942 ஆகிய இரண்டு முறை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
1940-ல் தனிநபர் சத்யாக்கிரகம் செய்து கைது ஆகி உள்ளார்.
ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னாள், அதற்கு பரிச்சார்த்தமாக டொமினியன் தகுதி வழங்கியபோது பாராளுமன்றச் செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.
1946-ல் கோவை டி.எஸ். அவினாசிலிங்கம் செட்டியார் கல்வி அமைச்சராக இருந்தபோதும் எல்.எஸ் கரையாளர் அவர்களின் ஆற்றலையும், அறிவுத்திறமையையும் நன்கறிந்த டி.எஸ்.அவினாசிலிங்கம் செட்டியார் அவர்களும் தொடர்ந்து பார்லிமெண்ட் செக்ரட்டிரியாக வைத்துக் கொண்டார். அதாவது துணை அமைச்சர் பதவி.
அதற்குபின் அமரர் புரட்சித்தலைவர் M.G.R ஆட்சியின்போது இதேபோன்று பார்லிமெண்ட் செகரட்டரி என்ற பெயரில் துணை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.
1951-ல் ஒன்றுபட்ட நெல்லை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்
1953-ல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர்.
1954-ல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்.
எல்.எஸ்.கரையாளர் அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த போதுதான், தமிழகத்தில் ஆவடியில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது.
அந்த மாநாட்டில்தான்  இந்திய தேசிய காங்கிரசுக்கு புதிய கொள்கையை, இந்திய ஜனநாயக சோசலிச காங்கிரஸ் என்று பாரதப்பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் பெயர் மாற்றம் செய்து சோசலிச கொள்கைக்கு இந்தியாவை திருப்ப முயன்றார்.
இந்த மாநாட்டை சிறப்புற நடத்தி அன்றைய அனைத்து இந்தியத் தலைவர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றதோடு பிரதமர் நேரு எல்.சட்டநாதக் கரையாளர் அவர்கள் மீது தனி அபையும் செலுத்தியுள்ளார்.
தமிழகத்தின் அடுத்த முதல்வர் எல்.எஸ். கரையாளர்தான் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காமராஜர் அவர்களின் சூழ்ச்சியால் அந்த சந்தர்ப்பம் நழுவிப்போனது. இது யாதவர்களின் துர்பாக்கியம்.
எல்.எஸ்.கரையாளர் முதல்வராக வந்திருந்தால் காமராஜர் எப்படி தன் இனத்தை எப்படி மறைமுகமாக வளர்த்தெடுத்தாரோ... அதேபோன்று இன்று ஜெயலலிதாவை வைத்து எப்படி சசிகலா தனது இனத்தை வளர்த்தெடுக்கின்றாரோ... அதேபோன்று, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக வந்து திருநாவுக்கரசர் எப்படி சசிகலா, நடராசன் ஆகியவர்களுடன் ரகசிய கூட்டணி வைத்து தனது இனத்தை முன்னிலைப்படுத்த முயல்கின்றாரோ அதைப்போன்று இன உணர்வோடு இந்த அனாதை இனத்திற்கும் ஒரு முகவரி தந்திருப்பார்.
1950-ல் காஞ்சிபுரம் யாதவ இளைஞர்கள் மாநாட்டிலேயே எல்.எஸ்.கரையாளர் அவர்கள் எண்ணத்தையும், இலட்சியத்தையும் வெளிப்படுத்திப் பேசியுள்ளார்.
அந்த இனமான உணர்வாளனின்; மேதையை  எண்ணி மகிழ்வோம். போற்றுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக