சனி, 30 ஜூன், 2018

மாவீரன் குருசாமி யாதவ்




மாவீரன் குருசாமி யாதவ்.



பொதிகை நதி பாயும் தென் தமிழகத்தில் திருநெல்வேலி சீமையில் சுமார் 500 யாதவர் குடும்பங்களை கொண்ட ஊர் தான் ஆட்கொண்டார்குளம். இந்த ஊர் சங்கரன்கோவில் வட்டாரத்தில் உள்ள யாதவர் கிரமங்களுக்கு தலைமை கிரமமாக ஆண்டாண்டு காலமாக திகழ்ந்து வருகிறது. இந்த ஊரில் உள்ள யாதவர்களுக்கு ஆடு,மாடு மேய்ச்சலும் விவசாயமும் குல தொழிலாகும். இவர்கள் தங்கள் ஆடுகளை மேய்ச்சலுக்காக வெளியூர் சென்று வரும் போது ஏற்படும் இடையூறுகளை தடுப்பதற்காக இவர்கள் சிலம்பாட்டம் முறையாக கற்றுக் கொண்டு வந்தார்கள்.இவர்களுக்கு கொண்டவல்வாடியை சேர்ந்த ராக்கப்ப கோனார் அவர்கள் மூலம் முறையாக சிலம்பம் கற்று மிகச் சிறந்து சங்கரன்கோவில் வாட்டாரத்திலே சுமார் 100 மையில் சுற்றளவில் இவர்களை வெல்ல யாரும் இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு பேரும் புகழும் பெற்று விளங்கினார்கள்.இந்த வீரம் விளைந்த பூமியில் பிறந்தவர் தான் நம் குல தெய்வம் C.G.யாதவ் என்று செல்லமாக அழைக்கபடும் நம் மாவீரன் குருசாமி யாதவ் அவர்கள்

குருசாமி யாதவின் இளமைபருவம்.
இவர் ஆட்கொண்டான்குளம் ஊரில் செல்லயா யாதவ் அவர்களுக்கும் வள்ளியம்மாள் என்பவருக்கும் 04-03-1965 அன்று செல்ல மகனாக பிறந்தார். இவர் சிறு வயதிலிருந்து தன்னோட தொடக்கபள்ளியே ஆட்கொண்டார்குளத்திலும். உயர்நிலையே சங்கரன்கோவிலும் முறையாக கற்றார்.C.G.யாதவ் அவர்கள் பள்ளி படிப்பில் சிறந்த மாணவராக விளங்கினார்.இவர் கபடி விளையாட்டில் சிறந்து விளங்கி பல பரிசுகளையும் பெற்றுள்ளார். பட்டப்படிப்பை மதுரை யாதவர் கல்லூரியில் படித்து B.sc பட்டம் பெற்றார்.அங்கு உள்ள யாதவர் இளைஞர்களை ஒன்று திரட்டி யாதவ மாணவ பேரவை அமைத்து திறம்பட செயல்படுத்தி வந்தார்.

இளங்கலை பட்டப்படிப்பை முடித்தவர்.
யாதவர் கல்லூரியில் படிக்கும்போதே
இனப்பற்றும் எழுச்சியும் கொண்டு
மாணவர்களுக்குத் தளபதியாக
மதிக்கப்பட்டவர் . அவரது சிற்றூராம்
ஆட்க்கொண்டார்கு ளத்தில் யாதவர்கள்
மட்டுமே வாழ்கின்ற பகுதியாகும்.
அடுத்துள்ள வீராணம் சிற்றூரில்
தங்களை ஆதிக்கவாதிகளாக
எண்ணிக்கொண்ட ஒரு வர்க்கத்தினர்,
யாதவர்களை நீண்ட காலமாகத் தொழில்
துறையில் ஈடுபடவிடாமல், அடகுத்
தொழில், அரசு தொடர்பான
ஒப்பந்தங்களில் அவர்களே இருந்து ஆட்சி
செய்தமை கண்டு-குருசாமி யாதவ்
அவர்கள் சினங்கொண்டு பொங்கி
எழுந்தார். அண்ணன் குருசாமி யாதவ்
அவர்களை போலவே தொழில்
செய்யவும், அரசு ஒப்பந்தங்களை
பெறவும் தொடங்கினார். அண்ணன்
குருசாமி யாதவ் தொட்டது எல்லாம்
பொன்னாக மாறிய காலம் அது.

1996 ஆம் ஆண்டு அண்ணன் குருசாமி யாதவ் சங்கரன்கோவில் ஒன்றிய செயலாளராக தேர்தலில் நின்று வெற்றியும்
பெற்றார். எங்கு சென்றாலும் எதிலும்
அண்ணன் குருசாமிக்கு தான் முதல்
மரியாதை. கொடிகட்டிப் பறக்கின்ற
நம்மிடம் போட்டி போடத் தொடங்கி
விட்டானே என்று ஒரு சாரார்க்கு
மிகுந்த பொறாமை அடர்ந்தது. தீர்த்துக்
கட்டத் திட்டம் தீட்டினர்! காவல் துறை
எச்சரித்தும் அந்த அரிமா அஞ்சாமல் வலம்
வந்தது. முப்பது பேர் கொண்ட
கூலிப்படைக்குப் பல லட்சம்
கொடுத்துப் பல மாதங்களுக்குப்
பின்னர் அவர்களால் 20-07-2000 அன்று
படுகொலை செய்யப்பட்டார்.
அவ்வீரனுடைய உயிர்தோழன்
திரு.மாரியப்பன் அவர்களும்,
அவர்களோடு இணைந்து
போராடியவரும் இன்னுயிர் நீத்த அவலம்
நமது இதயத்தைக் கசக்கிப்
பிழிகின்றது.

இன்னவருடைய
ஆள்வினைத் திறம் நம்மை வியந்து
நெகிழச் செய்கின்றது. மக்கள் தமிழ்
தேசக் கட்சி உருவாவதற்கு அடித்தளம்
அமைத்தவர். மதுரையம்பதியில்
மாவீரன் அழகுமுத்து விழாவினை
அரசு எடுத்துச் சிறப்பித்த போது 70
ஊர்திகளில் ஏழாயிரம் பேரைத் திரட்டி
வந்தவர்.

என்றென்றும் குருசாமி யாதவ் புகழ்   நிலைத்து நின்று
நமக்குச் சமுதாயத் தொண்டின்
இன்றியமையாமையினை  உணர்த்தி கொன்டே இருக்கும்.

சங்கரன் கோவில் ஒன்றியப் பெருந்தலைவராகத் திகழ்ந்தவர். அப்பகுதிப் பால்பண்ணைத்தலைவர். மற்றும் பல பொறுப்புகள் வகித்தவர். உதவி என்று வந்தவர்களுக்கு முகம் சுழிக்காமல் உதவி செய்தவர். சிறு வயதுலேயே சமுதாய உணர்வு கொண்டவர்.யாதவர் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தவர். யாதவர் கல்லூரியில் படிக்கும்போதே இனப்பற்றும் எழுச்சியும் கொண்டு மாணவர்களுக்குத் தளபதியாக மதிக்கப்பட்டவர். அவரது சிற்றூராம் ஆட்க்கொண்டார்குளத்தில் யாதவர்கள் மட்டுமே வாழ்கின்ற பகுதியாகும். அடுத்துள்ள வீராணம் சிற்றூரில் தங்களை ஆதிக்கவாதிகளாக எண்ணிக்கொண்ட ஒரு வர்க்கத்தினர், யாதவர்களை நீண்ட காலமாகத் தொழில் துறையில் ஈடுபடவிடாமல், அடகுத் தொழில், அரசு தொடர்பான ஒப்பந்தங்களில் அவர்களே இருந்து ஆட்சி செய்தமை கண்டு-குருசாமி யாதவ் அவர்கள் சினங்கொண்டு பொங்கி எழுந்தார். அண்ணன் குருசாமி யாதவ் அவர்களை போலவே தொழில் செய்யவும், அரசு ஒப்பந்தங்களை பெறவும் தொடங்கினார். அண்ணன் குருசாமி யாதவ் தொட்டது எல்லாம் பொன்னாக மாறிய காலம் அது. 1996 ஆம் ஆண்டு அண்ணன் குருசாமி யாதவ் சங்கரன்கோவில் ஒன்றிய செயலாளராக தேர்தலில் நின்று வெற்றியும் பெற்றார். எங்கு சென்றாலும் எதிலும் அண்ணன் குருசாமிக்கு தான் முதல் மரியாதை. கொடிகட்டிப் பறக்கின்ற நம்மிடம் போட்டி போடத் தொடங்கி விட்டானே என்று ஒரு சாரார்க்கு மிகுந்த பொறாமை அடர்ந்தது. தீர்த்துக் கட்டத் திட்டம் தீட்டினர்! காவல் துறை எச்சரித்தும் அந்த அரிமா அஞ்சாமல் வலம் வந்தது. முப்பது பேர் கொண்ட கூலிப்படைக்குப் பல லட்சம் கொடுத்துப் பல மாதங்களுக்குப் பின்னர் அவர்களால் 20-07-2000 அன்று படுகொலை செய்யப்பட்டார். அவ்வீரனுடைய உயிர்தோழன் திரு.மாரியப்பன் அவர்களும், அவர்களோடு இணைந்து போராடியவரும் இன்னுயிர் நீத்த அவலம் நமது இதயத்தைக் கசக்கிப் பிழிகின்றது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு தளபதி தீனதயாளன்’, நெல்லை மாவட்டத்தில் ஒரு குருசாமி. இன்னவருடைய ஆள்வினைத் திறம் நம்மை வியந்து நெகிழச் செய்கின்றது. மக்கள் தமிழ் தேசக் கட்சி உருவாவதற்கு அடித்தளம் அமைத்தவர். மதுரையம்பதியில் மாவீரன் அழகுமுத்து விழாவினை அரசு எடுத்துச் சிறப்பித்த போது 70 ஊர்திகளில் ஏழாயிரம் பேரைத் திரட்டி வந்தமை கண்டு வியந்து மாண்புமிகு பி.டி.ஆர் பழனிவேல்ராஜன் அவர்கள் அன்னாரைப் பாராட்டி விருது வழங்கினார். புகழுடம்பு எய்திய சாதனைச் இருவரும் நமது நெஞ்சத்தில் என்றென்றும் நிலைத்து நின்று நமக்குச் சமுதாயத் தொண்டின் இன்றியமையாமையினை உணர்த்துவார்கள்.





மிசா சாத்தையா கோனார்





                                மிசா சாத்தையா கோனார்

இராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் அகில இந்திய யாதவ மகா சபை மாநாடும் இந்த மாநாட்டை யாதவர்கள் எப்படி நடத்திட போகிறார்கள் என்பது ஒரு சவால் போன்று யாதவர்களுக்கு அமைந்த காரணங்கள் மாநாடு நடத்திட முக்கிய காரணமாக இடம் பெற்றவர்கள்
அகில இந்தியா யாதவ மகா சபையின் துணைத்தலைவர் தெ.நாகேந்திரன் , யாதவ மகா சபையின் முக்கிய பொறுப்பாளர் திருச்சி மலையாண்டி கோனார்
தென் மாவட்ட யாதவ மகா சபையின் கொள்கை பரப்பு செயலாளர் சேர்மன் மாவீரன் மிசா சாத்தையா கோனார் ,
யாதவர் சங்க மத்திய தலைவர் எஸ். கோபால கிருஷ்ணன் ஆகியோர் பங்கு மிக பெரியது...
1975_
ம் ஆண்டு ஜனவரி மாதம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிச்சைக் கோன் பொன்னாத்தாள் பெற்றெடுத்த இனத்தின் சமூகப் போராளி ஆறுமுகம் கோனார் என்பவர் அப்பகுதி யாதவர் குல வாழ் மக்களின் அடிமைச் சங்கிலியை உடைத்தெறியும் உன்னதப் பணியில் ஈடுபட்டிக் கொண்டிருந்த பொழுது யாதவ சமூக மக்களுக்கும் மீனவ சமூக பொது மக்களுக்கும் சமூக மோதல் ஏற்பட்டது மேற்படி மோதலுக்கு ஆறுமுகம் யாதவ் அவர்கள் தலைமைப் பொறுப்பு ஏற்று தான் யாதவ பிறந்த சமூக மக்களுக்கு நியாயம் கிடைக்க நீதி கிடைக்க அதர்மங்களை அகற்றி ஒழிக்க இனமான சமூக போராளியாகச் செயல்பட்டவர் விளைவு சமூக போராளி ஆறுமுகம் கோனார் மீனவ சமூக அக்கிராமக்காரர்களால் கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட செய்தி கேட்ட இராமநாதபுரம் மாவட்ட யாதவ சமூக மக்கள் பொங்கி எழுந்தனர் இனியும் தாமதித்தால் எம் இனத்தைக் காக்க போராளிகள் முன் வர மாட்டார்கள் எனவே மேற்படி கொலையைக் கண்டித்து தங்கச்சிமடத்திலேயே மிகப்பெரிய அளவில் மாநாட்டை நடத்த வேண்டும் என்றும் அதில் யாதவர் சமுதாய முக்கியத் தலைவர்களை பங்கேற்கச் செய்வது என்றும் இராமநாதபுரம் மாவட்ட யாதவர் சங்கம் முடிவு செய்தது ஜனவரி மாத இறுதியிலே தங்கச்சிமடத்தில் இராமநாதபுரம் மாவட்ட யாதவ சங்க தலைவர் தலைமையில் மிகப் பிரம்மாண்டமான மாநாடு தங்கச்சி மடத்திலே நடைபெற்றது.
மேற்காணும் மாநாட்டில் யாதவர் சங்க மத்திய தலைவர் கோவில் பட்டி எஸ். கோபால கிருஷ்ணன் , திருச்சி மலையாண்டி கோனார் , அகில இந்தியா யாதவ மகா சபையின் துணைத்தலைவர் தெ.நாகேந்திரன்
தென் மாவட்ட யாதவ மகா சபையின் கொள்கை பரப்பு செயலாளர் சேர்மன் மாவீரன் மிசா சாத்தையா கோனார் மற்றும் வார்த்தக பிரிவு விருகை இராமு மற்றும் பல்லாயிரக்கணக்கான யாதவ சமுதாய மக்கள் இளைஞர்கள் பெண்கள் என மக்கள் கூட்டம்
"
கடலா இல்லை மக்கள் தலையா " என்று காணும் தூரம் வரை குழுமியிருந்தனர் மேற்காணும் மாநாட்டில் முக்கிய தலைவர்கள் பேசும் முன்பு முதல் தலைவனாய் மாவீரன் மிசா சாத்தையா கோனார்க்கு போதிய வாய்ப்பு கொடுக்கப்பட்டது.....
பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டத்திலே மாவீரன் நாடி நரம்புகள் விடைக்க ரத்தம் கசியும் இதயத் தோடு தன்னுடைய வீர உரை வீச்சை ஆரம்பித்தார்....
ஆடுகளையும் மாடுகளையும் மேய்த்துப் பிழைக்கும் எம் இனம் எவனுக்கும் அடிமை கிடையாது.
சமூக நீதிக்காக போராடிய எம் இனத்தலைவன் பி.ஆறுமுகம் கோனார் அவர்களை கொலை செய்த கோழைகளே !!
உங்களுக்குத் தெம்பு இருந்தால் திராணி இருந்தால் இந்த மாநாடு முடிந்தவுடன் இந்த மிசா சாத்தையா உங்கள் பகுதிக்கே நான் தன்னந்தனியாக வருகிறேன் என்னோடு மோதி வெற்றி பெறுங்கள்...
நான் தோற்று விட்டால் என்னுடைய ஒட்டு மொத்த சமூகமும் உங்கள் முன் மண்டியிட்டு உங்களிடம் மானத்தை இழக்கிறோம்...
நேருக்கு நேராக ஜனநாயகப் பாதையிலே பேசித் தீர்க்க வேண்டிய விஷயத்திற்காக ஓர் சமூகப் போராளியை கொலை செய்த கோழைகளே !!
கம் பெடுத்து வேல் லெடுத்து கட்டிப்புரண்டு சண்டைப் போடுவது எம் இணத்து வரலாறு...
கண்ணுக்கு காணியத மைல் தூரம் மீன் பிடித்து பிழைப்பு நடத்துவது உன் இனத்தின் வரலாறு....
வீர இனத்தோடு மோத வந்த கோழைகளே வாருங்கள் களத்திற்கு இனிமேலும் நீங்கள் கொல்லைப்புறத்தின் வழியாக குறுக்குச் சந்தின் வழியாக ஈனப்புத்தி கொண்டு ஊமைகளையும் , ஆமைகளையும் வேவு பார்க்க சொல்லி கொலை செய்யும் கோழைத்தனத்தை இந்த மண்ணிலே நிகழ்த்தக் கூடாது....
மானம் காத்த எங்கள் பட்டன் இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் முதல் இந்திய சுதந்திர வீரனாய் வாழ்ந்து மறைந்த ஆங்கில ஏகாதிய பத்தியத்தின் முன் பீரங்கிக்கும் தோட்டக்களுக்கும் மார்பை பிலந்து காட்டிய மாவீரன் அழகுமுத்துக் கோன் பரம்பரையில் வந்தவர்கள் நாங்கள் பெட்டையாய் உங்கள் இனத்துப் பெண்களை வேசியாய் எங்களுக்கு அணுப்பி பிழைப்பு நடத்தும் மானங் கெட்டவர்களே உங்களுக்கு யார் கொடுத்தது கொலை செய்யும் அளவிற்கு தைரியம் !!
என்று பேசி முடித்தவுடன் ஒட்டு மொத்த கூட்டமும் உணர்ச்சிப்பிழப்பால் உணர்ச்சி கொதிப்பால் ஒட்டு மொத்தக் கூட்டமும் மேடையை நோக்கி முன்னேறியது கட்டுக் கடங்காத கூட்டத்தை கண் அசைவில் அமைதிப் படுத்தினார்..
மாவீரன் சாத்தையா கோனார் ஜனநாயகப் பாதையிலே வாழ்ந்து கொண்டிருந்த மாவீரனுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் இளைஞர்களின் கொந்தளிப்பு வீர நெஞ்சம் கொண்ட மாவீரன் நெஞ்சத்து ரத்த பாசம் கொண்ட சமுதாயத்திற்கு
"
அடித்தால் திருப்பி அடி " வன்முறையைத் தவிர்த்துப் பார் மீறினால் வாளை எடுப்பார் வம்புகள் உன்னிடம் தலைவணங்கும்...
என்ற கோசத்துடன் ஏற்கனவே உருவகாக்கப்பட்ட 200 சிலம்பாட்ட வீரர்களை உடன் அழைத்து கொண்டு கொலை செய்த கோழைகளின் பகுதியான மீனவ சமூக மக்களின் பகுதிக்கேச் சென்று சிலம்பாட்டம் ஆடி சமூக போராளியை கொலை செய்த கோழைகளே !!
என்னோடு மோதத் தாயரா என்று கூறினார். ஆனால் கொல்லைப்புற வழியிலே பின்னாங்கால் தரையில் அடிக்க தலைதெறிக்க ஓடி மாவீரனிடம் மண்டியிட்டது. மாவீரன் அச் சமூக மக்களை மன்னித்து இனிமேலும் இது போன்ற ஈனக்கொலை இம் மண்ணில் நடக்கக்கூடாது என்று எச்சரித்து அப்பகுதியை விட்டு விடை பெற்றார்..
வரலாறு படைப்பதற்காக_வே வாழ்ந்த மாவீரனாய் சரித்திர நாயகனாய் யாதவ சமூக மக்களின் உள்ளங்களில் திகழ்ந்தார். மேற்படி மாநாடு மாவீரனின் வீர உரை வீச்சு மாவீரன் களத்திற்கு சென்று விட்ட சவால் தென் மாவட்டம் முழுவதும் பரவியது இன எதிரிகள் பயந்து அச்சம் கொண்டார்கள் ஆனால் இன்றாளவும் அம்மண்ணில் நம் யாதவ சமூக மக்கள் மானத் தோடு வாழும் நிலைமை காணப்படுகிறது....
இன்று நிலையில் கூட அப்பகுதி மக்கள் மாவீரன் மிசா சாத்தையா கோனாரை தெய்வ வடிவில் வணங்குகிறார்கள் இனத்தின் மானம் காத்த மாவீரனை மறக்க முடியுமா இல்லை மறக்க நெஞ்சம் தான் இடம் கொடுக்கும் மா !!
யாதவ சொந்த மே !!
அடங்கா தேவனையும் அடக்கி ஆண்ட ஆயர்குல சிலம்பு சிங்கம் மாவீரன் மிசா சாத்தையா கோனார் அவர்களின் மறைக்கப்பட்ட வரலாறு நம் யாதவ சமூக மக்கள் இளைஞர்கள் அறிந்திட சொந்தங்கள் பகிர்ந்திடவும்...
வாழ்க வீரன் அழகுமுத்து கோன் புகழ் !!
வளர்க மாவீரன் மிசா சாத்தையா கோனார் வீரம் !!

என்றும் எழுச்சிமிகு சமுதாய பணியில் :-
யாதவர் இளைஞர் அணி.