சனி, 30 ஜூன், 2018

ஆ. கார்மேக கோனார்.





                    . கார்மேக கோனார்


கார்மேகக் கோனார் 1889ஆம் ஆண்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அகத்தாரிருப்பு என்னும் சிற்றூரில் பிறந்தவர்.
பணி:
மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த் துறையில் 37 ஆண்டுகள் பணியாற்றியவர். அங்கு இவரிடம் தமிழ் கற்றவர்களில் குறிப்பிடத்தக்க சிலர்:

பொதுவுடைமைக் கட்சித் தலைவர் என். சங்கரய்யா தமிழ்நாடு பொதுநூலகத் துறை இயக்குநர் வே. தில்லைநாயகம் நிலச்சீர்திருத்தப் போராளி கிருட்டிணம்மாள் செகநாதன் *அரசுச் செயலர் கி. லட்சுமிகாந்தன் பாரதி இவர், சென்னைப் பல்கலைக் கழகப் பாடத் திட்டக் குழுவில் தொடர்ந்து 21ஆண்டுகள் தலைவராக இருந்தார்.
ஆக்கங்கள்
இவர் பின்வரும் நூல்களை இயற்றி இருக்கிறார்:
அறிவு நூல் திரட்டு (2 தொகுதிகள் - உரைநூல்)
ஆபுத்திரன் அல்லது புண்ணியராஜன் (உரைநூல்)
இதிகாசக் கதாவாசகம் (2 தொகுதிகள்)
ஐங்குறு நூற்றுச் சொற்பொழிவுகள்
ஒட்டக்கூத்தர்
கண்ணகி தேவி
காப்பியக் கதைகள்
கார்மேகக் கோனார் கட்டுரைகள்
கார்மேகக் கோனார் கவிதைகள்
செந்தமிழ் இலக்கியத்திரட்டு I
பாலபோத இலக்கணம்
மதுரைக் காஞ்சி
மலைபடுகடாம் ஆராய்ச்சி
மூவருலா ஆராய்ச்சி
தமிழ்ச்சங்க வரலாறு (கட்டுரை)
தமிழ்மொழியின் மறுமலர்ச்சி
நல்லிசைப் புலவர்கள் (உரைநூல்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக