சனி, 16 ஜூன், 2018

கோனார்மகன்

             

                கோனார்மகன்.


முல்லைக்குடி மக்களின் முன்னேற்றத்தை எதிர் நோக்கிய பயணம்.
கோனார் மக்களே ஆதரவு தாரீர்.


எம் இனத்தின் பல இளைஞர்கள் வளர்ந்து வருகிறார்கள் அவர்களை நாம் சரியான முறையில் வளர்த்தெடுக்க வேண்டும்.
இன்று பலரும் வரலாற்றை மாற்றி எழுதி வருகிறார்கள்
நாம் அமைதி காத்தால் ஒதுக்க படுவோம்
நமது உண்மை வரலாற்றை நம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
அறிவார்ந்த இடையர் சமூகத்தை உளவியல் தாக்குதலுக்கு உள்ளாக்கி முடக்கிவிட்டது திராவிட கட்சிகள்.
ஒரு இனத்தை கட்டுப்படுத்த அவர்களை உடல் பலம் கொண்டு அடக்கி ஆள்வது என்பது வேறு... மனோ ரீதியாக கட்டுப்படுத்தி கட்டுக்குள் வைப்பது என்பது வேறு...
உதாரணமாக...
சத்ரிய இனத்தை பிராமணர்கள் அழித்து விட்டதாக பரசுராமர் கதை என்று ஒன்றை கூறுவார்கள்...
உண்மையில் அவர்கள் அழித்தது சத்ரியர்களின் வாரிசுகளை அல்ல... அவர்களின் மனதில் இருந்த சத்ரியர் என்ற மற உணர்வை... அன்று அவர்கள் மனதில் நாம் உண்மையான சத்ரியன் இல்லை கலப்பினம் என்ற எண்ணத்தை விதைத்து அவர்களின் மற தன்மையை வீழ்த்தினர் என்பதே உண்மை.

மேலும் இன்றும் இடையனுக்கு காந்தாரி சாபம் இன்றும் தொடர்கிறது என்ற கருத்தை விதைப்பதன் உள்நோக்கமும் இடையர்களின் மீதான உளவியல் ரீதியாக தாக்குதல் தான்.

அது மட்டுமல்லாமல் இடையன் தன் பலம் உணர கூடாது எனும் நோக்கில் "யாதவன் என்பது வட நாட்டு பெயர்... ஆகையால் நீ வந்தேரி" என்று கூறுவதும்... அந்த "வந்தேரி" பட்டத்தை தவிர்க்க என்ன செய்வது என்பது போன்ற மாயையில் இடையர்களை ஆள்த்தி தங்களை யாதவர் இல்லை என்று அதே இடையன் வாயாலேயே சொல்ல வைக்கிறார்கள்...
இது தான் இடையர்கள் மீதான உண்மையான இல்லுமினாட்டி வேலை
அதை சட்டை செய்யாமல் போவதை விடுத்து நாமும் அவர்கள் எதிர்பார்ப்பு படி நாங்கள் யாதவரே இல்லை இடையர் தான் என்று கூறி நம்மை நாமே நாமும் தமிழன் தான் தேற்றி கொள்கிறோம்...
இடையனுக்கு யாதவன் என்ற பெயரும் உள்ளது என்பதால் பிறர் கூற்றுப்படி நாம் வந்தேரி எனில் வந்தேரியாகவே இருப்போம்... பிறகு பாருங்கள் தமிழ் கூறும் முல்லை நில ஆயர்கள் வந்தேரி இல்லை பழங்குடி தமிழர்களே என காட்டி ஆக வேண்டிய கட்டாயம் தமிழ் அறிஞர்களுக்கு வரும் அவர்களே கூறுவார்கள் யாதவன் என்பது பச்சை தமிழே அதற்கு பொருள் இன்னது இன்னது என்றும்...
இது ஒருவகையில் யார் பொண்டாட்டி பத்தினியோ அவன் கண்ணுக்கு தான் கடவுள் தெரிவார் என்று சொல்லி எனக்கும் கடவுள் தெரிகின்றார் என பிறரை ஒப்புக்கொள்ள செய்வதை போன்றதே...
நமக்கு சரியான தலைமை இல்லாததும் நம்மிடையே ஒற்றுமையின்மையும் ஓர் முக்கிய காரணம்.
தற்காலத்தில் இணையத்தில் கோலோச்சும் நம் இளையர்கள் நமது வரலாற்றை நன்கு புரிந்து முன்னேறி வரவேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

இடையர் ஒற்றுமை ஓங்கட்டும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக